• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

Last Song of Helin Bolek

T

! The Reader !

Guest
:brokenheart::brokenheart:
The Last Song

Turkish singer Helin Bölek was part of a longer non-violent struggle for rights........
April 3rd The revolutionary singer had died after 288 days of being on hunger strike, demanding the freedom to sing the songs of her choice.





It was depressing to see the video of a small group of mourners wearing corona-prevention masks being dispersed with water cannons on a rainy day in Istanbul. The group was carrying the body of Helin Bölek for the funeral on April 4. The revolutionary singer had died after 288 days of being on hunger strike, demanding the freedom to sing the songs of her choice.




 
T

! The Reader !

Guest
உலகின் பல நாடுகளில் வலதுசாரி சக்திகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி கொண்டு நடத்தும் கோமாளித்தனங்களையும் சாதாரண மக்களுக்கு எதிராக நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதல்களையும் பார்க்கும்போது வலதுசாரிகளின் குணாம்சம் ஒரேமாதிரியான அரக்கத்தனம் வாய்ந்ததாக காட்சியளிக்கிறது...

எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நன்கு உணர்ந்து திட்டமிட்டு தவறான அடியாக எடுத்து வைப்பதில் கை தேர்ந்தவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்...

அந்த நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப்படுவது சாதாரண மக்களும் ஜனநாயகத்தை விரும்புபவர்களும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களும் முற்போக்கு சிந்தனையாளர்களும் மட்டுமே ஆவர்...

அமெரிக்கா, இந்தியா, பிரேசில், துருக்கி என்று நாடு, மதம், இனங்களைக் கடந்து வலது சாரிகள் ஒரே மாதிரியான குணாம்சத்தைத் தான் கொண்டிருக்கிறார்கள்...
அந்த வகையில்....துருக்கியில் 2016 ம் ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டுள்ள இடதுசாரி நாடோடி இசைக் குழுவான "யோரம்" மீது தடை விதிக்கப்பட்டதோடு... அந்தக் குழுவின் இசைக்கலைஞர்கள் பலரையும் துருக்கி அரசு சிறையில் அடைத்தது...
யோரம் இசைக் குழுவின் இசை நிகழ்ச்சிகளும் பாடல்களும் துருக்கி மக்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றவை ஆகும்...
தங்கள் இசைக்குழு மீதான தடையை நீக்கவும் சிறையிலடைக்கப்பட்ட சக கலைஞர்களை விடுவிக்கவும் கேட்டு, ஆளும் எர்டோகன் அரசை வலியுறுத்தி கடந்த 323 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்த இப்ராஹிம் கோக்செக் என்ற 41 வயதான கிடார் கலைஞர் மே 7 அன்று மரணம் அடைந்தார்...
மரணமடைவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அவர் மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டார்... இருப்பினும் உடல் நலம் குன்றி மரணமடைந்தார்....
ஏற்கனவே இந்த இசைக்குழுவைச் சேர்ந்த ஹெலின் போலெக் என்ற 28 வயது இளம் பாடகி 288 நாட்கள் நீண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் இடையே உயிர் நீத்தார்...
அறப் போராட்டத்தில் வீரமரணம் அடைந்த தங்கள் அன்புக்குரிய இசைக் கலைஞனை காணவும்...இறுதி யாத்திரையில் கலந்து கொள்ளவும் பல்லாயிரக்கணக்கானவர்கள் குவிந்தனர்...
நீதிக்கான போராட்டங்களில் இன்னுயிர் ஈந்த தியாகிகள் சிந்திய குருதி வீணாவது இல்லை...அநீதிகளைக் கண்டு வீரப்போர் புரியும் சக்தியினை அளித்து மக்களை வெகுண்டு எழச் செய்யும் என்பதே அவரைக்காண அணி திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் திரள் உணர்த்தும் செய்தியாகும்....
 

Attachments

Top