• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

மனுநீதி

Since 1983

Ravanan
Joined
Jun 25, 2020
Messages
257
Points
28
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் உள்ள விசயத்தை இப்போது யாராவது கடைபிடிக்கிறார்களா என்கிறான்.

மனுநீதி என்பதே யாருக்கும் தெரியாது என்கிறான்.

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் வெங்காயம், பூண்டு விலையேற்றத்தின் போது, நாங்கள் அதை உண்பதில்லை என்று பதிலளித்தார். அதற்கு எது காரணம் தெரியுமா? இதே மனுதர்ம நூல் தான்.

வெங்காயம், பூண்டு இவைகளைப் பார்ப்பனர்கள் சாப்பிடக் கூடாது. மீறி சாப்பிட்டால், சாப்பிட்ட உடனே கெட்ட சாதி ஆகிவிடுகிறார்கள். (மனு: 5-5, 6).

2000 வருசத்துக்கு பின்னாடி பார்லிமெண்டுல நிதியமைச்சர் மனுதர்மத்தின் படி பேசுறவா.

மனு சாஸ்திரம் எப்போதோ எழுதப்பட்டது. அது தற்காலத்துக்குப் பொருந்தாது. அதை ஏன் இப்போது சந்திக்கு இழுக்க வேண்டும்?? என்று சிலர் பேசுகிறார்கள்.

மனு சாஸ்திரத்தை எழுதியது பார்ப்பனன் அல்ல. சத்திரியன் என்றும் பம்முகிறார்கள்.
அப்படியல்ல...

வால்மீகியாகட்டும், வியாசர் ஆகட்டும், கம்பர் ஆகட்டும், கண்ணதாசன் ஆகட்டும், மனுவை எழுதிய X - சத்ரியன் ஆகட்டும்.

இவர்கள் எல்லோரையும் பார்ப்பனர்கள் ஒரு டைப்பிஸ்ட்டுகளாக மட்டுமே பயன்படுத்தினர்.

EPS, OPS, L.முருகன், குஷ்பு, மோடி, அமித் போன்ற சூத்திரர்களை இப்போது பார்ப்பனர்கள் எப்படி தங்களது மெளத்பீசாகப் பயன்படுத்துகிறார்களோ..

அதைப் போலவே அந்த்காலம் தொட்டு பிற சூத்திரர்களை வைத்து தங்களுக்குச் சாதகமானவற்றை எழுத வைத்தார்கள்.
வால்மீகியும், வியாசரும், கம்பரும் , மனுவை எழுதிய சத்திரியனும் வெறும் டைப்பிஸ்ட்டுகள்.

அவர்கள் என்ன எழுத வேண்டுமென்பதை டிக்டேட் செய்தது பார்ப்பனர்கள்.

இந்தியர்கள் யாவரும், ( ஆண் - பெண், மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் ) சமமானவர்கள். இன்னும் ஒருபடி மேலே போய் இந்தியர் யாவரும் உடன் பிறந்தோர் எனும் அளவிற்கு சமத்துவத்தை அடிநாதமாகக் கொண்டது தான் நமது அரசியல் சட்டம்.

ஆனால் நடைமுறையில் இந்திய அரசியல் சட்டத்தை விட மனுசட்டம் தான் பொது சமூக மக்கள் மனதில் வேரூன்றியிருக்கிறது.

மனுவின் நோக்கம், பெண்களை இழிவுபடுத்தி, அடிமைப்படுத்தச் சொல்வது மட்டுமல்ல.

மனு தர்மத்தின் நோக்கம் என்பது.. பார்ப்பன மேலாதிக்கத்தை என்றென்றும் நிலைநிறுத்தி, சூத்திரர்களைக் கீழ்நிலையில் வைத்து, நால்வர்ண சிஸ்டத்தைப் பாதுகாப்பதே..

இந்த மனு சட்டம் தான் பொதுசமூக மக்களின் மனங்களை ஆள்கிறது. நீதிபதிகளின், ஆட்சியாளர்களின், பெரும்பான்மை மீடியாக்களின் மனதை ஆள்கிறது.

பொது சமூகத்தின் ஆழ்மனதில் வேரூன்றிப்போன இந்த மனுமனோபாவம் தான் ஊராட்சித் தலைவரைத் தரையில் அமர வைக்கிறது.

இந்த மனு சட்டம் எல்லா நிர்வாக அமைப்புகளிலும் கோலோச்ச முடிவதால் தான், அதனால் வரும் தைரியத்தால் தான்..

இந்தியக் குடியரசின் தலைவரைப் பார்த்து , ஒரு சாதாரண கோவில் பூசாரி, "கோவிலுக்குள் போகக்கூடாது" எனக் கூற முடிகிறது.

இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராக இந்தியக் குடியரசுத் தலைவரையே அவமதித்த அந்தப் பூசாரியை தூக்கில் போட முடியாத அளவிற்கு மனு சட்டம் தான் அவனைப் பாதுகாக்கிறது.

இந்த மனுமனோபாவம் தான் பிஞ்சுப் பெண் குழந்தைகளும், எல்லா வயதிலும் இருக்கும் பெண்கள் மீதான வன்கொடுமையின் போது..

இரக்கமில்லாத நச்சுக்கருத்துகளைப் பேச வைக்கிறது.

அக்கிரஹாரத்திலிருந்து, சூத்திரர் தெருக்களையும், ஊர்களிலிருந்து அவர்ணர்களும் சாதி எதிர்ப்பாளர்களான பட்டியல் வகுப்பினரையும் பிரித்து வைப்பதும்.. ஆம்.. அது சரிதான்.. தர்மம் தான் எனப் பேச வைப்பதும் மக்களின் மனங்களை ஆளும் மனுதர்மம் தான்.

இந்திய அரசியல் சட்டப்படி இப்படிச் செய்வது தண்டனைக்குரிய குற்றம்.

ஆனால் இ.அ.சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா?? இல்லை மனு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா??

இந்திய அரசியல் சட்டப்படி இந்த சமத்துவமின்மையைத் தண்டிக்க ஏற்படுத்தப்பட்ட அதிகார அமைப்புகளின் மூலமே..
சூத்திரருக்குத் தனியாகவும், பட்டியல் இனத்தவருக்குத் தனியாகவும் வாட்டர் டேங்க், ரேஷன் கடைகள், சுடுகாடுகளைத் தனியாகவும் அமைக்கும் அளவு துணிச்சலை மனு சட்டம் தான் தருகிறது.

இடி அமீனைப் போல இகழப்பட வேண்டிய மெண்டல் பையனான மனுநீதிச் சோழனை.. புகழ்ந்து பேச வைப்பதும் இதே மனுநீதிமனநிலை தான்.

இந்திய அரசியல் சட்டம் உள்நோக்கமின்றி செய்த தவறை மன்னிக்கும். அல்லது குறைந்தபட்ச தண்டனை வழங்கும்.
ஆனால் மனுநீதியோ... தெரியாமல் தேர்க்காலில் சிக்கி இறந்து போன கன்றுக்காக.. சூத்திர மன்னனின் மகனையே கொல்ல வைக்கும்.

பார்ப்பனன் அதே பசுவை யாகத்தில் வெட்டிப் போட்டதற்காக பார்ப்பான் மகனை கொல்லத் தேவையில்லை. மாறாக பார்ப்பான் பசுவை வெட்டி யாகம் செய்ததற்காக சூத்திர மன்னன் பார்ப்பானுக்கு. மாட்டு மந்தைகளையும், பொன், பொருள், ஆடைகளையும் தர வேண்டும் என நீதி வழங்கும்.

மனு சட்டம் இப்போது நடைமுறையில் இல்லை. புறந்தள்ளி விடலாம் என்றால்..

மாட்டுக்காக மகனையோ கொன்ற மனுநீதிச் சோழனை சைக்கோ மன்னனாக அல்லவா நமது பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும்??

மனு நீ..தி..ச் சோழன் என்றல்லவா இன்றளவும் சொல்லிக் கொடுக்கிறோம்??

சில சினிமாப் படங்களில் கிராமங்களில் உங்க போலீசும், உங்க சட்டமும், நீதியும்.. இங்க செல்லுபடியாகாது. இங்க எங்க நாட்டாம சொல்ற தீர்ப்புக்கு தான் கட்டுப்படுவோம்னு சொல்லி கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி , கழுதை மேல ஏற்றி விடுற மாதிரி காட்சி இருக்கும்.

ஆனா நாட்டாம சட்டப்படிதான் அங்க ரேஷன் கடை வந்ததா, ரோடு வந்ததா, பெட்ரோல் வந்ததா, பள்ளிக்கூடம் வந்ததா, கரண்ட் வந்ததா?? னு கேட்டா பதில் இருக்காது.

அந்த நல்ல விஷயங்கள் அனைத்தும் இந்திய அரசியல் சட்டத்தால் வந்தது.

ஆனால் சாதிய மேலாண்மையும், நாட்டாமை பதவியும் மனு கட்டமைத்த சாதியால் வந்தது..

இப்படி..கிட்டத்தட்ட இந்தியா முழுவதுமே மனு சட்டத்தின் மறைமுக ஆட்சியே நடக்கிறது. தமிழகத்தில் அதிமுக முகமூடியை பயன்படுத்தி பிஜேபி ஆள்வதைப் போல..

எனவே...

மனுசாஸ்திரத்தின் மீது அவ்வப்போது அடிக்கப்படும் அடி என்பது சனாதன கும்பலைப் பொறுத்த வரை.. அவர்களது கருத்தியலை உருவாக்கும் கர்ப்பப் பையின் மீது விழும் அடி..

அதனால் தான் இப்படி சுருண்டு விழுந்து கதறுகிறார்கள்.

அக்கிரமம் செய்யும் அசுரனின் உயிர்.. எங்கோ ஒரு இடத்தில் இருக்கும் கிளியின் உடலுக்குள் இருப்பதாக சில கதைகள் உண்டு.

அதைப் போலவே சற்றேறக்குறைய எல்லா பொது சமூக மக்களின் மனதிலும் புகுந்து அவர்களை சாதிவெறி மனநோயாளிகளாக மாற்றி வைத்து ஆட்டம் போடும் சனாதனத்தின் உயிர் நிலை..

இந்த ஸோ கால்டு யாருமே கண்டுகொள்ளாத , காலத்திற்கு ஒவ்வாத மனு சாஸ்திரத்திற்குள் மறைந்து கிடக்கிறது.
இப்போது சனாதன முனிவர்களும், தேவர்களும் நிலைநிறுத்த முயலும் வேதகால வாழ்க்கைமுறையின் உயிர்..

இந்த மனுதர்ம கிளிக்குள் இருக்கிறது.

அதனால் தான் அண்ணல் அம்பேத்கர், தலைவர் எம்.சி.ராஜா, பெரியார், திருமா போன்ற அசுரர்கள் அந்த மனுசாஸ்திரக் கிளியை நசுக்கி வதை செய்யும் போதெல்லாம்..

சனாதன முனிவர்களும், தேவர்களும் கதறித் துடிக்கின்றனர்.

அசுரர்களே இறுதியில் வெல்லட்டும்.
 
Top