• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

பொருளாதார வீழ்ச்சியில்..

silra illapa

New Member
Joined
Jul 18, 2019
Messages
19
Points
3
பொருளாதார வீழ்ச்சி.. இந்தியாவிற்கு பேராபத்து.. இல்லை.. இது வெறுமனே சில துறைகளின் சரிவு மட்டுமே.. அச்சம் வேண்டாம் என்று இரண்டு விதமான விவாதங்கள் நடைபெறுகிறது நம்நாட்டில்... இதில் சாமானியனாக என்னுடைய புரிதலை பகிர்கிறேன்..

ஒருநாட்டின் பொருளாதாரத்தை எப்படி புரிந்து கொள்ளலாம்.. உதாரணமாக ஆட்டோமொபைல் துறையை எடுத்துக் கொள்ளலாம்.. ஆட்டோமொபைலில் இருசக்கர வாகனம் பெரும்பாலும் எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தால் வாங்கப்படும்.. கார் முன்னேறிய மற்றும் முன்னேறும் நடுத்தர வர்க்கத்தால் வாங்கப்படும்.. டிராக்டர் விவசாய பயன்பாட்டிற்கு வாங்கப்படும்.. கனரக வாகனம் தொழில் முனைவோரால் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்காக பொருள் நகர்வுக்கு வாங்கப்படும்.. மிகவும் எளிதாய் புரிந்து கொள்ள வேண்டும் எனில் இதில் எந்த வாகனம் விற்பனையாகவில்லையோ அந்த வர்க்கம் நலிவடைந்துள்ளனர்.. பணப்புழக்கத்திற்கு மக்கள் தயாரில்லை என புரிந்து கொள்ளலாம்.. இதே போல் நெசவு, மின் சாதன பொருள்கள், அழகு சாதன பொருள்கள் என்று அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.. இன்று அனைத்து துறைகளும் சரிவை சந்தித்துள்ளன..
ஆட்டோமொபைல் ஒரு துறை வீழ்ச்சி எனில் இன்று அரசு சொல்லும் 2020 ல் வர போகும் BS6 மாதிரிக்காக மக்கள் இன்று வாங்க தயக்கம் எனும் விளக்கத்தை ஏற்கலாம்.. ஆனால் அனைத்து துறைகளிலும் நலிவு.. புது முதலீடுகள் இல்லை என்பது ஒரு துறையின் வீழ்ச்சியல்ல.. அன்றாட பயன்பாட்டு பொருள்களிலும் வீழ்ச்சி.. இதை எப்படி சாதாரணமாக கடக்க முடியும்..

பொருளாதாரம் ஒரு வலைப்பின்னல்.. ஒரு விவசாயிக்கு நல்ல விளைச்சல் இருந்து கையில் பணம் இருந்தால் அவன் தன்மகனுக்கு தேவையான உணவுபண்டம், அழகுசாதனம் வாங்கி தருவான்.. தன்னுடைய மற்றும் தன்னை சார்ந்தவருக்காக டிராக்டர் வாங்குவான்.. இந்த அழகுசாதன மற்றும் ஆட்டோ மொபைல் துறை நிறுவனம் வரும் இலாபம் கொண்டு புதிய கிளைகளோ அல்லது வேறு துறையிலோ முதலீடு செய்வான்.. அந்த நிறுவனத்தில் அந்த விவசாயி போல் ஏதோ ஒரு விவசாயின் மகன் பணியில் சேரும் பொழுது அந்த குடும்பத்தின் வருமானம் இருமடங்கு ஆகும்.. அன்று அவன் அத்தியாவசியத்திலிருந்து ஆடம்பரம் நோக்கி நகர்ந்து கார் அல்லது பைக் மற்றும் வீட்டிற்கு தேவையான மின்சாதன பொருள் வாங்குவான்.. அந்த துறைகளும் முன்னேறும்.. வேலைவாய்ப்பு பெருகும்.. இந்த வலைப்பின்னல் பாதிப்படைந்தால் நேரடியாக பாதிப்பு நமக்கு தெரியாது.. மறைமுகமாக தெரியும்.. உங்கள் வருமானம் பெருகாது.. என்ன தொழில் செய்தாலும் வரவும் செலவும் சரியாக இருக்கும்.. சரி உன் பிள்ளை உன்னை காப்பாற்றுவான் என்று எண்ணினால் அது தவறு.. அவன் தண்டசோறு என்று உன்னிடம் பேச்சு வாங்கி கொண்டு மனதிற்குள் நொந்து கொண்டிருப்பான்.

ஆனால் இன்று அனைத்து துறைகளும் நலிவடைய காரணமாக சொல்வது என்ன? தனிமனிதன் கையில் பணம் இல்லை என்கிறது ஆய்வும் அறிஞர்கள் கூற்றும்.. இந்த வலைப்பின்னலின் முக்கிய புள்ளியான நுகர்வோர் எனும் தனிமனிதனிடம் பணம் இல்லையெனில் எப்படி உயரும் பொருளாதாரம்.. உயர்ரக வாகனம் ஆனாலும் அது இயங்க எரிபொருள் தேவை தானே. இல்லையென்றால் ஒரு அடி நகராது.. இன்று அந்த நிலை தான்..

அரசு கவனம் கொள்கிறதா? சரியாகிவிடுமா?
நம்நாட்டின் 50%க்கும் மேல் மக்கள் நம்பி இருப்பதும் நமது உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பதும் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலே.. அதை தலை நிமிர செய்யாமல் பொருளாதாரம் தலைநிமிராது.. விவசாயும்,விவசாய கூலியுமே இங்கே மிகப்பெரும் நுகர்வோர்.. அவன் கையில் பணப்புழக்கம் ஏற்படாவிட்டால் அனைத்து துறைகளையும் ஒன்றன்பின் ஒன்றாய் மூடிவிட்டு செல்ல வேண்டும்.. ஆனால் அரசு அந்த பெரும்குடியை கண்டுகொள்ளவில்லை என்பதே உண்மை..
இவர்கள் சரி செய்யவில்லை.. மாறாக இந்த அரசு மேலும் ஆபத்தையே விளைவிக்கிறது.. ரகுராம் ராஜன், உர்ஜித் படேல், மன்மோகன் போன்ற வல்லுநர்கள் எதிர்ப்பையும் மீறி ரிசர்வ் வங்கியின் உபரித்தொகையை எடுத்து செலவு செய்கிறார்கள்.. அது சூதாட்டம் போன்றது.. ஒரு வீட்டின் அவசரகால தேவைக்காக வைத்திருக்கும் சேமிப்பு போன்றது உபரித்தொகை.. அதை செலவு செய்வது பேராபத்து.. உர்ஜித்படேல் இந்த விவகாரத்தில் தன் பதவியை ராஜினாமா செய்து எதிர்ப்பு தெரிவித்தும் அரசு அலட்சியமாக சக்திகாந்ததாஸை வைத்து இப்படி ஒரு சூதாட்டம் ஆடுகிறது..

அடுத்துஎன்ன?
இதிலும் முன்னேற்றம் இல்லை என்று சொல்லி வங்கி மற்றும் காப்பீட்டுதுறையில் உள்ள Unclaimed account கோரப்படாத பணத்தை எடுத்து செலவு செய்வீர்.. அது சட்டவிரோதம் என சட்டம் உள்ளதால் சட்டதிருத்தம் செய்வீர்கள்.. கடைசிவரை பொருளாதாரம் உயராது.. சாமானியன் ஏமாந்து கொண்டே இருப்பான்..
நன்றி
 
T

! The Reader !

Guest
விதை நெல்லை அவித்துத் தின்கிறார்கள்...! ரிசர்வ் வங்கியில் கை வைக்கிறார்கள்!
 

silra illapa

New Member
Joined
Jul 18, 2019
Messages
19
Points
3
விதை நெல்லை அவித்துத் தின்கிறார்கள்...! ரிசர்வ் வங்கியில் கை வைக்கிறார்கள்!
அடுத்தவன் வீட்டு நெல்லையும் திருட போகிறார்கள்.. கோரப்படாத கணக்குகளின் தொகை எடுப்பதற்கான சட்ட திருத்த வேலைகள் ஆரம்பம் ஆகியுள்ளது.. :laughhard:
 
Top