• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

பெண்ணிய போராளி..

silra illapa

New Member
Joined
Jul 18, 2019
Messages
19
Points
3
ஜூலை 30.. டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் அவர்களின் பிறந்தநாள் இன்று..

தன் வாழ்நாள் எல்லாம் பெண்களின் உரிமைக்கும், விடுதலைக்கும் போராடி பல துயரங்களை இன்றைய தலைமுறைக்கு என்ன என்று அறியாதவாறு துடைத்தெறிந்தவர்..
1. பெண்ணிய போராளி, தன்னார்வலர், மருத்துவர், எழுத்தாளர் என பல முகம் கொண்டவர்.
2. இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர்.
3. இரு தாரம் தடைச் சட்டம் கொண்டு வந்தவர்.
4. பெண்கள் பாலிய விவாகம் தடைச்சட்டம் .
5. பெண்களுக்கு சொத்துரிமை
6. மிக முக்கியமாக தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்தவர்.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் முத்துலட்சுமி அவர்கள் கொண்டு வந்த பொழுது எதிர்ப்பு வலுத்தது.. தேவதாசிப் பெண்களே அதை எதிர்தனர்.. அதைப்பற்றிய விவாதம் சட்டசபையில் நடக்கும் பொழுது சத்தியமூர்த்தி கூறினார். "தேவதாசி என்போர் கடவுளுக்கு தொண்டு செய்வோர். இதனால் அவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும். இது மதத்தின் புனிதம்.. எனவே இதை தடை செய்யக்கூடாது" என்றார்..
அதற்கு பதில் அளித்த முத்துலட்சுமி அவர்கள் " ஐயா.. இன்றுவரை பிற்படுத்தபட்ட மக்களே தேவதாசியாக கோயில்களில் தொண்டு செய்கிறார்கள்.. எனவே எங்கள் சமூகம் அதிகமான புண்ணியத்தை சம்பாதித்து விட்டது.. எனவே உங்கள் உயர்சாதியினரும் கொஞ்சம் புண்ணியம் பெற விட்டு கொடுக்கிறோம்.. இனிமேல் உங்கள் வீட்டு பெண்கள் இந்த சேவை செய்யட்டும்.. உங்கள் புனிதமும் கெடாது.. கடவுள் தொண்டும் நிற்காது.. புண்ணியமும் கிடைக்கும்" என்றார்.. பிறகு என்ன...யாரும் அந்த சட்டத்தை எதிர்க்கவில்லை.. இனிதே நிறைவேறியது.
இப்படி பெண்களுக்காக வாழ்நாள் எல்லாம் போராடிய அம்மையாரை போற்றுவோம்..
 
T

! The Reader !

Guest
தேவதாசி ஒழிப்புச் சட்டம் பற்றிய விவாதம் சட்டசபையில் நடக்கும் பொழுது சத்தியமூர்த்தி கூறினார். "தேவதாசி என்போர் கடவுளுக்கு தொண்டு செய்வோர். இதனால் அவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும். இது மதத்தின் புனிதம்.. எனவே இதை தடை செய்யக்கூடாது" என்றார்..



அதற்கு பதில் அளித்த முத்துலட்சுமி அவர்கள் " ஐயா..

(
இன்றுவரை பிற்படுத்தபட்ட மக்களே தேவதாசியாக கோயில்களில் தொண்டு செய்கிறார்கள்.. எனவே எங்கள் சமூகம் அதிகமான புண்ணியத்தை சம்பாதித்து விட்டது.. எனவே உங்கள் உயர்சாதியினரும் கொஞ்சம் புண்ணியம் பெற விட்டு கொடுக்கிறோம்.. இனிமேல் உங்கள் வீட்டு பெண்கள் இந்த சேவை செய்யட்டும்.. உங்கள் புனிதமும் கெடாது.. கடவுள் தொண்டும் நிற்காது.. புண்ணியமும் கிடைக்கும்" என்றார் ) ---> Periyaar Gave This Tactic Words To Dr. Muthulakshmi For Face Bhramanical Groups Arguments.



பிறகு என்ன...யாரும் அந்த சட்டத்தை எதிர்க்கவில்லை.. இனிதே நிறைவேறியது.
இப்படி பெண்களுக்காக வாழ்நாள் எல்லாம் போராடிய அம்மையாரை போற்றுவோம்..[/QUOTE]
 
Top