• Any Registered names in the Forum containing Skype ID or any other Contact Information will be Deleted.Try to Register names that aren't contact details .
  • Please keep the forum free from abuse , we request you to be civil .
  • Post your Queries and Posts Under Appropriate categories ,inappropriate Threads and posts will be Moved to the particular Category .

சட்ட மாமேதை சாதி தலைவர் ஆனார்..

silra illapa

New Member
Joined
Jul 18, 2019
Messages
19
Points
3
அனைவருக்கும் சமமான ஒரு சட்ட மாமேதையை ஒரு குறிப்பிட்ட சாதிகளின் அடையாளமாக மாற்றியது யார்?.. அம்பேத்கார் என்பவர் சாதி ஒழிப்பு போராளி.. பெண்ணிய போராளி.. மொத்தத்தில் அடிமைதனம் எந்த ரூபத்திலும் எந்த பெயரிலும் இருக்ககூடாது என போராடியவர்.. அவரை ஒரு சாதியின் அடையாளம் என்று எண்ணுபவன் மனநோயாளியே..

இடஒதுக்கீடு ஒரு சிலருக்கானதா? அம்பேத்காரின் சட்டகுழு இடஒதுக்கீடு சட்டத்தை மட்டும் தான் இயற்றியதா? உலக அளவில் தனிமனித சுதந்திர சட்டம் அதிகம் உள்ளது இந்திய அரசியலமைப்பில் மட்டுமே.. அதனால் தான் இந்தியர் ஒருவரின் சிலை வெளிநாட்டில் அதிகமாக உள்ளது எனில் அது அந்த சட்டமாமேதையின் சிலையே.. உலகிற்கே தெரியும் அவர் யார்..அவர் எழுதிய சட்டத்தின் வலிமை என்ன என்று.. ஆனால் அவர் யாருக்காக போராடினாரோ அவர்களுக்கே தெரியவில்லை என்பதே வருந்த வேண்டியது..

இடஒதுக்கீடு ஏன்? பல வருடமாக படித்தும் நம்மால் ஆங்கிலம் சரியாக பேச இயலவில்லையே ஏன்? ஏனெனில் அதிலிருந்து நாம் அந்நிய பட்டிருக்கிறோம்.. நாம் தினசரி உபயோகப்படுத்தும் மொழியில்லை ஆங்கிலம்.. மேலும் அதை நமக்கு புரிய வைக்கும் அளவிற்கு நம் வீட்டில் மற்றோரும் படிக்கவில்லை.. கல்வி பல காலமாக மறுக்கப்பட்டது.. எனவே நம் முன்னோர் படிக்கவில்லை.. எனவே சரியான வழிகாட்டுதல் இல்லை.. காலம் காலமாக கற்றோனும் ஒரு வீட்டின் ,ஒரு சமுதாயத்தின் முதல் பட்டதாரியும் ஒன்றல்ல.. இதை உணர்ந்தே 37% மக்கள் தொகை உள்ள BC க்கு 27%, 27% மக்கள் தொகை உள்ள MBC க்கு 20%, 25% மக்கள் உள்ள SC க்கு 18%, 1% உள்ள பழங்குடிக்கு 1%, 6%உள்ள சிறுபான்மையினருக்கு 3% என்ற விகிதத்தில் இட ஒதுக்கீடு தரப்பட்டது.. 31% பொதுப்பிரிவு.. அனைவரும் போட்டி போடும் இந்த பொதுப்பிரிவில் இடஒதுக்கீடு இன்றி ஒருவன் போட்டி போடும் நிலைவருகிறதோ.. அன்று இந்த இடஒதுக்கீடு ஒழிய வேண்டும் என்பதே அந்த சட்ட மாமேதையின் நிலைப்பாடு.. அந்த நிலை வந்து விட்டதா? இல்லை அவரின் கருத்தில் தவறு உள்ளதா? பிறகு ஏன் அவர் மேல் வன்மம்..

சிலை உடைத்தால் மாறிவிடுமா? உன் பணத்தில் தான் அரசு மீண்டும் சிலை வைக்கும்.. யார் பணம் விரையம் ஆகும்? நாடு விடுதலை பெற போராடிய தீரன் சின்னமலை, வ.உ.சி, கட்டபொம்மன் போன்றோரையும், சாதியை ஒழிக்க போராடிய சட்டமாமேதை அம்பேத்கார், பெரியார், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அனைவரும் கல்வி பெற போராடிய காமராஜர் போன்றோரை ஒரு ஜாதிக்கு மட்டும் சொந்தம் என்னும் குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்கும் சான்றோரே... குறைந்தபட்சம் அவர்கள் கருத்தையேனும் படித்துவிட்டு வாருங்கள்.. அவர்கள் போதித்தது அனைவரையும் நேசிக்கவும், ஒற்றுமையை பேணவும் தான்..

மனிதம் பேணுவோம்
 
T

! The Reader !

Guest
பிற்படுத்தப்பட்டோருக்காக
மத்திய அமைச்சர் பதவியை
துறந்தவர் அம்பேத்கர்....

1952 ம் ஆண்டு சட்ட அமைச்சர் பதவியை தூக்கி எறிகிறார் அம்பேத்கர்.அவர் பதவி விலகியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று

பெண்களுக்கு சொத்துரிமை,விவாகரத்து உரிமை
மகப்பேறு விடுப்புரிமை என பெண்களுக்கு உரிமைகள் வழங்குகிற இந்து சட்ட தொகுப்பை நிறைவேற்ற முடியாமல் போனதற்காக.

இரண்டு

அரசியல் சாசனசட்டம் நிறைவேற்றப்பட்ட போது பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை சட்டபூர்வமாக்க அம்பேத்கர் வலியுறுத்துகிறார் பிற்படுத்தப்பட்டோர பட்டியல் அரசிடம் இல்லை எனவே பிற்படுத்தப்பட்டோருக்கான ஒரு கமிஷன் அமைத்து பட்டியல் தயார் செய்யப்படும். அதன்பிறகு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்று அம்பேத்காருக்கு பதில் அளிக்கப்பட்டது. ஆனால் அரசியல் சாசன சட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கழித்தும் பிற்படுத்தப்பட்டோருக்கான கமிசன் அமைக்கப்படாதையும் சுட்டிக்காட்டி அம்பேத்கர் தனது அசைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

பகிரங்கமாக பட்டப்பகலில் வேதாரண்யத்தில் சிலை உடைப்பு
அம்பேத்கர் மீது ஏன் இவ்வளவு
ஆத்திரம்.அவர் அப்பழுக்கற்ற நேர்மையாளர்.தலித்துகளைப் போலவே பிற்படுத்தப்பட்டவர்களை நேசித்தவர்.ஏன் தேசத்தையே நேசித்தவர்.

தொழில்,விவசாயம்,அரசுத்துறை,தேர்தல்பகுத்தறிவு,கல்வி, அறிவியல் பார்வை,பெண்ணுரிமை எல்லாம் பற்றி அவருக்கு மிக உன்னதமான கணவு இருந்தது.அந்த கணவுகள் அவரது சிலையை உடைத்தவர்களின் நல்வாழ்வையும் உள்ளடக்கியது தான்.

தமிழ்சமூகம் எப்போது அறிவுடைய சமூகமாக மாறும்.
உண்மையான எதிரிகளை இனம் கண்டு
அம்பேத்கர் போன்ற நண்பர்களை வாரி அணைத்துக் கொள்ளும்.
 
T

! The Reader !

Guest


சாக்ரடீஸை படியுங்கள் என்றபோது நீங்கள் கிரேக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

கார்ல் மார்க்ஸை படியுங்கள் என்றபோது நீங்கள் யூதனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸை படியுங்கள் என்றபோது நீங்கள் ஜெர்மானியனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

வ்ளாடிமிர் லெனினை படியுங்கள் என்றபோது நீங்கள் ரஷ்யனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

எர்னஸ்டோ சே குவேராவை படியுங்கள் என்றபோது நீங்கள் அர்ஜென்ட்டினியனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

ஜான் லாக்கை படியுங்கள் என்றபோது நீங்கள் சுதந்திரவாதியா என்று கேள்வி எழுப்பவில்லை.!

ஃபிடல் காஸ்ட்ரோவை படியுங்கள் என்றபோது நீங்கள் கியூபனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

நெல்சன் மண்டேலாவை படியுங்கள் என்றபோது நீங்கள் தென்ஆப்பிரிக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

ஃப்ரெட்ரிக் டக்ளஸ், ஆபிரகாம் லிங்கனை படியுங்கள் என்றபோது நீங்கள் அமெரிக்கனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

மார்ட்டின் லூதர் கிங்கை படியுங்கள் என்றபோது நீங்கள் நீக்ரோவா என்று கேள்வி எழுப்பவில்லை.!

சார்லஸ் டி கோளலை படியுங்கள் என்றபோது நீங்கள் பிரெஞ்சுக்காரனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

வில்லியம் வாலஸை படியுங்கள் என்றபோது நீங்கள் ஸ்காடிஷ்ஸா என்று கேள்வி எழுப்பவில்லை.!

மாவோ சேதுங்கை படியுங்கள் என்றபோது நீங்கள் சீனனா என்று கேள்வி எழுப்பவில்லை.!

ஆனால்,,,

தன் வாழ்நாளில் 46 லட்சம் புத்தகங்களை வாசித்த, உலகின் மிகப்பெரிய வடிவிலான அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த,
15000 பக்கங்களை எழுதி 55க்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளியிட்ட,
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் பகுத்தறிவு பொதுவுடைமையை போதித்த,
காலனி ஆதிக்கத்தை எதிர்த்து இந்தியாவிற்காக போராடிய,
சாதிமத ஆதிக்க ஒடுக்குமுறையை எதிர்த்து இந்தியாவில் போராடிய,
இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் "
"பாரத ரத்னா" “பாபாசாஹேப்
டாக்டர் அம்பேத்கர் (M.A., Ph.D., M.Sc., D.Sc., Barrister-at-Law, L.L.D., D.Litt)” அவர்களை படியுங்கள் என்றால் மட்டும்,

“ஏன் நீங்கள் தலித்தா” என்ற மூர்க்கத்தனமான கேள்வி எழுகிறது.!?

என்னவிதமான புரிதல் இது...???
கேடுகெட்ட சமூகத்தில் வாழ்கின்றோம்.
 
Last edited by a moderator:

silra illapa

New Member
Joined
Jul 18, 2019
Messages
19
Points
3
நல்லவர்களை சாதி பயன்படுத்திகொள்ளும்.. கெட்டவன் சாதியை பயன்படுத்திகொள்வான்... அவ்வளவு தான் தோழரே இவர்கள்.. சித்தாந்தம் படிப்போம்.. சிந்தித்து வாழ்வோம்..
 
Top