சிறுநீரக கற்களை வெளியேற்றும் பீன்ஸ்

Luv U Oct 12, 2017

 1. Luv U

  Luv U Senior Member Senior's

  Credit:
  $388.71
  ஒரேநாளில் சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் பீன்ஸ்... எப்படி சாப்பிடணும்?

  நாம் குடிக்கும் தண்ணீரிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா போன்ற பல தாது உப்புக்கள் உள்ளன. அவை உணவு செரித்தபின் சிறுநீரில் வெளியேறிவிடும்.  சில நேரங்களில் இதன் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும்பொழுது சிறுநீரில் வெளியேறுவது சற்று சிரமமாகிவிடும். இவை சிறுநீரகம், சிறுநீரகக் கூழாய்களில் படிகம் போல் படிந்து நாளாக ஆக கல் போல திரண்டுவிடுகிறது. இவற்றைத்தான் நாம் சிறுநீரகக் கல் என்று கூறுகிறோம்.


  இதனால் உண்டாகும் வலி முதலில் முதுகில் தொடங்கி, வயிற்றுப்பகுதிக்கு வந்து பின், வயிற்றின் அடிப்பகுதியில் கடுமையான வலியை உண்டாக்கும்.

  இதனால் சிறுநீர் கழிக்கும்போது ரத்தம் கலந்து வருதல், காய்ச்சல் போன்ற பிரச்னைகள் உண்டாகும்.

  இதற்கு வீட்டு வைத்தியமாக வாழைத்தண்டு சாறு குடிப்போம். அது மிகச்சிறந்த மருந்து. அதைப்போலவே குறிப்பாக அதைவிட வேகமாக ஒரே நாளில் சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் மற்றொரு வைத்தியமும் நம்முடைய கையிலேயே இருக்கிறது.

  பீன்ஸைக் கொண்டு நம்முடைய சிறுநீரகக் கல்லை ஒரே நாளில் வெளியேற்றிவிட முடியும்.

  அரை கிலோ பீன்ஸை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ள வேண்டும்.

  அதன்பின் ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் பீன்ஸைப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து ஒரு மணிநேரம் வேகவைக்க வேண்டும். நன்கு வெந்தபின், அந்த பீன்ஸை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து அதை பீன்ஸ் வேகவைத்த அதே தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும்.

  அன்றைக்கு முழுவதும் இந்த தண்ணீரிரை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். அன்றைய நாள் முழுவதும் வேறு எந்த உணவையும் சாப்பிடக் கூடாது.

  இந்த தண்ணீரைக் குடித்து மூன்று மணிநேரத்தில் சிறுநீர் கழிக்கச் செல்லும்போதெல்லாம் அதை பாட்டிலில் பிடித்துப் பாருங்கள். சிறுநீர் கற்கள் வெளியேறத் தொடங்கும். அன்றைய இரவுக்குள் சிறுநீர் பாதையில் உள்ள கற்கள் முழுமையாக வெளியேறத் தொடங்கிவிடும்.

  இதை செய்யும் நாளில் வேறு கடினமான வேலைகள் எதுவும் செய்யாமல் நன்கு ஓய்வெடுங்கள்.